உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்

கோவில் உண்டியலுடன் மர்ம நபர்கள் ஓட்டம்

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவிலில் சனி பகவான் அருள் பாலிக்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோவில் பணியாளர்கள் வந்து பார்த்த போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. நாச்சியார் கோவில் போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து, உண்டியல்கள், 'சிசிடிவி' கேமராவை உடைத்து, உண்டியலுடன் தப்பியது தெரிந்தது. கோவிலில் இருந்த உண்டியல் கடந்த 7ம் தேதி திறந்து எண்ணப்பட்டு, அதில் இருந்த 70,000 ரூபாய், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதை அறியாமல் கோவிலுக்குள் வந்து, கேமராக்களை உடைத்து, உண்டியலை திருடிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ