மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாடிமூலை கிராமத்தை சேர்ந்த பரமேஷ்வரன், 40, திருப்பூரில், வெல்டராக பணியாற்றி வந்தார். இவர், பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்து விட்டு, நேற்று அதிகாலை பைக்கில் மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் அருகே வந்த போது, திருச்சியில் நடந்த வி.சி., கட்சி மாநாட்டுக்கு சென்றவர்கள் வேன், நாகப்பட்டினம் நோக்கி வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக வேன் - பைக் நேருக்கு நேர் மோதியதில், பரமேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். வேன் சாலையோர பள்ளத்தில் இறங்கியதில், 25 பேர் காயமடைந்தனர்.போலீசார், பரமேஷ்வரன் உடலை மீட்டனர். காயமடைந்த 25 பேரும், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025