உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மறைமலை அடிகள் பேத்தி வீடு கேட்டு மனு அளிப்பு

மறைமலை அடிகள் பேத்தி வீடு கேட்டு மனு அளிப்பு

தஞ்சாவூர்; தமிழ் தந்தை என போற்றப்பட்டவர் மறைமலை அடிகளார். இவரது மகன் பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா, 43, பி.காம்., பட்டதாரி. இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசிக்கிறார். லலிதாவின் கணவர் செந்தில்குமார், 52, மாவு மில் ஒன்றில் வேலை பார்க்கிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா, நேற்று கலெக்டர் அலுவலகத்தில், 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்' என மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், வீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.பின், லலிதா கூறியதாவது:என் கணவர், மாவு மில்லில் வேலை செய்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வாடகை கொடுப்பதற்கு வருமானம் இல்லாத காரணத்தால், குடிசை மாற்று வாரியத்தில் வீடு தர வேண்டும் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன்.மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்து, ஓராண்டாக காத்து இருக்கிறேன். எனவே, கலெக்டர் என் மனுவை ஆய்வு செய்து, வீடு மற்றும் மகளிர் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Narayanan
நவ 26, 2024 14:35

இந்த அம்மா கருணாநிதியை ஏதாவது சொந்தம் சொல்லி கேட்டால் வீடு கிடைக்கும். திமுக வை பொறுத்தவரையில் கருணாநிதி மட்டுமே தமிழை வளர்த்தவர் அவரால் மட்டுமே தமிழ் வாழ்வதாக சொல்கிறார்கள். அவரின் வாரிசுகள்தான் உரிமை அனைத்தையும் அடைய நினைக்கிறார்கள் .


Rajasekar Jayaraman
நவ 26, 2024 09:16

மறைமலை அடிகள் பெயரை பயன்படுத்தி பிச்சையா?


Palanisamy T
நவ 26, 2024 14:14

அவசரப்படாதீர்கள், வார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட வேண்டாம். வேறு வழியில்லாமல் கேட்டது தமிழ் வளர்த்த அடிகளாரின் பேத்தி. நியாயமாக கொடுக்கப் படவேண்டும். அவர்கள் நம்பிக்கையோடு இருப்பார்கள் என நம்புவோம். இப்போது நம் நினைவிற்க்கு கப்பலோட்டிய வ வு சி அவர்கள் நம் நினைவிற்கு வரவேண்டும்.


rama adhavan
நவ 26, 2024 20:50

அப்போ பல ஆண்டுகளுக்கு முன் இறந்த அரசியல் பிரமுகர்களை இப்போதும் நினைவு படுத்துவது ஓட்டு அரசியலுக்காகவா?


theruvasagan
நவ 26, 2024 08:44

முத்தமி்ழ் வித்தகராயிருந்தார். தமிழ் தொண்டாற்றினார். என்ன உபயோகம். சந்ததிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தெருவில் நிற்கிறார்கள். ஆனால் முத்தமிழ் வித்தவர்களுக்கு நூறு தலைமுறைகளுக்கும் குறையாத பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் குவிந்தன. ஆகவே. மக்களே சிந்தியுங்கள். தமிழை வளர்த்தவர்கள் வாழ வழியில்லாமல் போனார்கள் தமிழால் வளர்ந்தவர்கள் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.


rama adhavan
நவ 26, 2024 07:32

பாவம். உடன் நடவடிக்கை தேவை. இல்லை எனில் தமிழ் வேதனை படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை