மேலும் செய்திகள்
பண்ணையை சிப்காட்டாக மாற்ற எதிர்ப்பு
13-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் தெருநாய் களுக்கான தடுப்பூசி முகாம் சாலையோரம் நடத்தப் பட்டதால், வாகன போக்கு வரத்து ஸ்தம்பித்தது. தஞ்சாவூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பள்ளியக்ரஹாரம் பகுதியில், மிஷன் ரேபிஸ் வெறி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. தஞ்சாவூர் தி.மு.க., - எம்.பி., முரசொலி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், ''ரேபிஸ் இல்லா தஞ்சாவூரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்தில், 24,500 தெருநாய்கள் உட்பட 60,000 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. '' மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தில் அமைந்துள்ள விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு மையத்தின் மூலமும், இதுவரை 3,973 சமுதாய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,'' என்றார். தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், சாலையோரம் வைத்தே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எம்.பி., -- எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அரசு நிகழ்ச்சியை சாலையில் தான் நடத்த வேண்டுமா என, வாகன ஓட்டிகள் புலம்பினர்.
13-Sep-2025