5ம் வகுப்பு மாணவியரிடம் சில்மிஷம் ஆசிரியர், தலைமையாசிரியை சிக்கினர்
தஞ்சாவூர்: அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர், கண்டுகொள்ளாத தலைமையாசிரியை கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுப்புளிக்காடு, அரசு நடுநிலை பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லையை சேர்ந்த பாஸ்கர், 53, என்பவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார். அவர், மாணவியரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத் தில் ஈடுபட்டுள்ளார். இதை யறிந்த சக ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியை, நரியம்பாளையத்தை சேர்ந்த விஜயா, 55, என்பவரிடம் புகார் கூறினர். அவர் அப்புகாரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மாணவியர் பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் உறவினர்களுடன் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு, பாஸ்கரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்கர் மீது புகாரும் அளிக்கப்பட்டது. விசாரணையில், பாஸ்கர், ஏழு மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெ ரிந்தது. இதையடுத்து, பாஸ்கர், விஜயாவை போக்சோவில், போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.