உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இரண்டு சிறுவர் உட்பட 3 பேர் பணம் பறித்த வழக்கில் கைது

இரண்டு சிறுவர் உட்பட 3 பேர் பணம் பறித்த வழக்கில் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி, 36. இவர், ஏ.டி.எம்., ஒன்றில், 4,000 ரூபாய் எடுத்து, அதை கைப்பையில் வைத்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூ --- வீலரில் வந்த இருவர், பாக்கியலட்சுமி வைத்திருந்த பையை பறித்து தப்பினர்.இதுகுறித்து பாக்கியலட்சுமி, போலீசில் புகார் அளித்தார். புகாரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 15 மற்றும் 17 வயது சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் பிலகுளவியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, 20, என்பவருடன் சேர்ந்து, இவர்கள் வழிப்பறி செய்து வந்தது தெரிந்தது.சிறுவர்கள் தகவலின் பேரில் பூபதி ராஜாவை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுவர்கள் இருவரையும், தஞ்சாவூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !