உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமனம்; பொய் தகவல் பரப்பியதாக வி.எச்.பி., நிர்வாகி கைது

கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமனம்; பொய் தகவல் பரப்பியதாக வி.எச்.பி., நிர்வாகி கைது

தஞ்சாவூர்: கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள பிரசன்ன ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அறங்காவலர்களாக நர்கீஸ்கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இஸ்லாமியர் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், 'என் அப்பா தங்கராஜ், அம்மா நீலாவதி இருவரும் ஹிந்துக்கள் தான். அம்மா நீலாவதிக்கு பிரசவத்தில் சிக்கல் இருந்தபோது, நர்கீஸ்கான் என்ற மருத்துவர் உதவியுள்ளார். அவருடைய நினைவாக, எனக்கு, மருத்துவர் நர்கீஸ்கான் பெயரை சூட்டியுள்ளனர்' என, நர்கீஸ்கான் விளக்க வீடியோ வெளியிட்டார்.மேலும், தவறான தகவல் பரப்பியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அய்யம்பேட்டை போலீசில் கடந்த மார்ச் 20ல் நர்கீஸ்கான் புகார் அளித்தார். புகாரின்படி, சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்ட நபர் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த சரவண கார்த்தி, 43, என்பவர் தான், சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டது என தெரிய வந்தது. சரவண கார்த்தி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, கலவரத்தை துாண்டும் வகையில் தவறான செய்தியை பதிவிட்டு, பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாக, சரவண கார்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் இருந்த அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.சரவண கார்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால், தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thiyagarajan S
மார் 27, 2025 07:08

ஏயப்பா ஆச்சரியமா இருக்கு....... நம்ம ஊரு போலீசு இவ்வளவு வேகமாக வேலை செய்யுதா.......ஓஹோ ஆட்சியாளருக்கு எதிரான புகாரா அதான் இப்படி தீயா வேலை செய்யுது......இல்லேன்னா குறட்டை விட்டு தூங்குமே


venugopal s
மார் 25, 2025 12:00

இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?இவர்கள் பிழைப்பே பொய்யை வைத்து தானே ஓடிக் கொண்டு இருக்கிறது !


ஆரூர் ரங்
மார் 25, 2025 11:36

நானறிந்த வரை எந்த முஸ்லிமும் எக்காரணம் கொண்டும் இந்திய மொழியில் பெயர் வைத்துக் கொள்வதில்லை. எல்லாம் அரபி (அல்) பெர்ஸியப் பெயர்கள். நர்கீஸ் அவர்களின் பெற்றோர்கள் சிந்தித்திருக்க வேண்டும். மற்றபடி இது கைது செய்யுமளவுக்கு தகுதியான வழக்கல்ல. மன்னித்து விட்டு விடலாம்.


N Sasikumar Yadhav
மார் 25, 2025 09:14

களவானிங்க எவ்வளவோ அவதூறு பரப்பினானுங்க அப்போது கைதுசெய்யாத காவல்தொறை இந்துமத இயக்கம் என்ற உடனே கைதுசெய்ய பறந்து வருகிறது


Bala Santhanam
மார் 25, 2025 23:38

correct Hindukkal endral alwa sappidavathu pol dravida natharikalukku. Avan unnmai thanmaiyai check pannavensum


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை