உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூலவைகையில் இரவு பகலாக டிராக்டர்களில் மணல் கடத்தல் : விவசாயிகள் கூட்டத்தில் புகார்

மூலவைகையில் இரவு பகலாக டிராக்டர்களில் மணல் கடத்தல் : விவசாயிகள் கூட்டத்தில் புகார்

தேனி : மூலவைகை ஆற்றில் இரவு பகலாக டிராக்டர்களில் மணல் கடத்துவதாக விவசாயிகள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.தேனியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கோவிந்தசாமி ,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் குருமூர்த்திஉட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: வாழையில் காஞ்சரை நோய் தாக்குதல் குறித்து, விவசாயிகள் புகார் கூறினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் பழனிசாமி கூறியதாவது: வாழையில் காஞ்சரை நோயை கட்டுப்படுத்த, 'பனோலி' என்ற ஆயில் மருந்தை விவசாயத்துறை பரிந்துரை செய்துள்ளது. ஐந்தாவது மாதத்தில் இருந்து, ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மி.லி., கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். வேறு மருந்துகளையும் உடன் சேர்க்கலாம். நெருக்கி நடுதல், அதிக ஈரப்பதம் கூடாது, என்றார்.விவசாயிகள் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்வதில்லை. ஈரப்பதம், தூசு இருப்பதாக கூறி வாங்க மறுக்கின்றனர்.மூலவைகை பகுதியான கோபாலபுரம் பகுதியில், இரவு பகலாக டிராக்டர்களில் மணல் கடத்தல் நடக்கிறது.கரும்பு வெட்ட கூலி அதிகம் உள்ளதால், உபகரணங்களை பயன்படுத்த உதவ வேண்டும்.சர்க்கரை ஆலை எடை மேடைகளில் எடை குறைவாக காட்டப்படுகிறது என விவசாயிகள் கூறினர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை