உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க.வேட்பாளருக்கு கும்ப மரியாதை அளித்த ம.தி.மு.க.,

தி.மு.க.வேட்பாளருக்கு கும்ப மரியாதை அளித்த ம.தி.மு.க.,

கம்பம் : ஆதரவு கோரி சென்ற தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு கும்ப மரியாதை செய்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வரவேற்றார்.தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி கம்பம் அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து சென்றார்.தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், கம்பத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார்.இவர் வருவதை அறிந்த ராமகிருஷ்ணன், வேட்பாளருக்கு கோயில் அர்ச்சகர் மூலம் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றார். வரவேற்பிற்கு மாவட்ட செயலாளர் நன்றி தெரிவித்து சென்றார். வேட்பாளருடன் நகர் தி.மு.க. செயலாளர் பால்பாண்டி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.பட விளக்கம் : ஆதரவு கேட்டு சென்ற தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு தனது வீட்டில் கும்ப மரியாதை செய்த ம.தி.மு.க. மாவட்ட செயாலாளர் ராமகிருஷ்ணன். படம் மெயிலில் உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை