உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி

ஓட்டளித்து விட்டு திரும்பிய பெண் பலி

தேவதானப்பட்டி : லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து விட்டு மகனுடன் டூவீலரில் திரும்பிய பெண் கீழே விழுந்து பலியானார்.திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி வைலட் மேரி 48. இவரது மகன் நவீன்குமாருடன் 24. டூவீலரில் ஏப்.19ல் தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கடமலைக்குண்டுவில் ஓட்டுப்பதிவு செய்ய வந்தார். ஓட்டுப்பதிவு செய்து விட்டு அன்றே நவீன்குமாருடன் ஊருக்கு திரும்பினார். ஜெயமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே டூவீலரில் செல்லும்போது பின்னால் உட்கார்ந்து வந்த வைலட்மேரி நிலைதடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை