உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது

ஆட்டோவில் தவறி விழுந்தவர் மீது லாரி மோதி பலத்த காயம்; இரு டிரைவர்கள் கைது

போடி : போடி பெருமாள் கோயில் எதிரே பூக்கார தெருவில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி 45. இவர் போடி அணைப்பிள்ளையார் அணை அருகே உள்ள தோட்டத்திற்கு தர்மத்துப்பட்டியை சேர்ந்த கண்ணன் 50, என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றதில் சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரியின் பின் டயர் கீழே விழுந்து கிடந்த சுந்தரமூர்த்தியின் காலில் ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரமூர்த்தி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். போடி டவுன் போலீசார் ஆட்டோ டிரைவர் கண்ணன், கேரளா ராஜகுமாரி தலைச்சேரி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சாஜி பவுலோஸ் 51. இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ