உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்கள் இருவர் மீது வழக்கு

பெண்கள் இருவர் மீது வழக்கு

போடி: போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் இந்துராணி. இவருக்கும் இதே பகுதி சேர்ந்த மருதமுத்து சுகுணா என்பவருக்கும் வீட்டு ஒத்தி பணம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதற்கு ராஜம்மாள் 70, என்பவர் சாட்சி கூறி உள்ளார். இந்நிலையில் இந்துராணி துாண்டுதலின் பேரில் ராஜம்மாள் வீட்டின் முன்பாக இருந்த மாதுளை மரச் செடிகளை சிறுமிகள் சேர்ந்து வெட்டி சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.ராஜம்மாள் தட்டி கேட்ட போது இந்திராணி அவரது தோழியான மல்லீஸ்வரி சேர்ந்து ராஜம்மாளை ஜாதியை கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக ராஜம்மாள் புகார் செய்தார்.போடி தாலுகா போலீசார் இந்துராணி, மல்லீஸ்வரி இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை