உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவனிப்பு இல்லாததால்அ.தி.மு.க., களப்பணியில் தொய்வு

கவனிப்பு இல்லாததால்அ.தி.மு.க., களப்பணியில் தொய்வு

தேனி : தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க.,வில் தொடர்ந்தாலும் கட்சியினரிடம் அறிமுகம் குறைவு தான்.இத்தொகுதியில் போட்டியிடும் தினகரன், தங்க தமிழ்செல்வனை ஒப்பிடுகையில் இவரும் அவர்களுக்கு நிகராக பசையுள்ளவராக உள்ளார். ஆனால் தேர்தலில் கட்சி நிர்வாகிகளை கவனிப்பதில் கை சுருக்கம் காட்டுவதால் களப்பணியும் தொய்வு ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், மற்ற வேட்பாளர்கள் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.இவர் வேட்பு மனுத்தாக்கலுக்கு அதிக தொண்டர்களை அழைத்து வரவும், ஒருசில நிர்வாகிகளுக்கு கார் வசதிக்கு கவனிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அறிந்த மற்ற நிர்வாகிகள் 'அப்செட்டில்'உள்ளனர். போதிய கவனிப்பு இல்லாததால் உள்ளூர் நிர்வாகிகளும் ஆப் ஆகியுள்ளனர். இதனால் அ.தி.மு.க., தேர்தல் பணி மந்தகதியில் உள்ளது. கீழ் மட்டம் வரை கவனிப்பு நடந்தால் மட்டுமே களப்பணியை தீவிரபடுத்துவோம் எனகூறுகின்றனராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ