உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதம் அடைந்த பாலம் சீரமைக்காததால் விளை பொருட்கள் கொண்டு வர சிரமம்

சேதம் அடைந்த பாலம் சீரமைக்காததால் விளை பொருட்கள் கொண்டு வர சிரமம்

போடி : சில்லமரத்துப்பட்டி - பெருமாள் கவுண்டன்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்துள்ளதால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற 2 கிமீ., தூரம் உள்ள சில்லமரத்துப்பட்டிக்கு செல்ல வேண்டும். அல்லது 5 கி.மீ., தூரம் உள்ள போடிக்கு வர வேண்டும். பெருமாள் கவுண்டன்பட்டியில் இருந்து சில்லமரத்துப்பட்டிக்கு செல்ல ரோடுக்கான பாதை இருந்தும், டூவீலர் கூட செல்ல முடியாத நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. பல மாதங்கள் ஆகியும் பாலம் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. பெருமாள் கவுண்டன்பட்டி - சில்லமரத்துபட்டிக்கு பஸ் வசதி இல்லாமல் உள்ளது.சேதம் அடைந்த ரோட்டில் மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வரவும், மக்கள் மருத்துவ வசதி பெறவும், விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவில் விளக்கு வசதி இல்லாததால் சேதம் அடைந்த சாக்கடை பாலத்தின் பள்ளம் தெரியாத நிலையில் டூவீலரில் வரும் போது அடிக்கடி வாகனம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சேதம் அடைந்த சாக்கடை சிறு பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சாக்கடை பாலம் அமைப்பதோடு, குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை