உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செல்வவரித் திட்டம் அமல்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

செல்வவரித் திட்டம் அமல்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

தேனி: ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான் நாட்டில் நடைமுறையில் உள்ள செல்வ வரி திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.' என, தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: உலகில் மூன்றில் 2 பங்கு நாடுகள் செல்வவரி திட்டத்தை அமல்படுத்தி வசூல் செய்கின்றன. இந்தியாவில் முன்பு இந்த வரிவிதிப்பு நடைமுறையில் இருந்தது. தற்போது நடைமுறையில் இல்லை. ரூ.ஆயிரம் கோடி சொத்து மதிப்பில் லாபம் ஈட்டுபவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு சதவீத வரிவிதிக்க வேண்டும். அதன்பின் அவர்களின் வாரிசுகளுக்கும் சொத்து மாறும்போது, ரூ.ஆயிரம் கோடி மதிப்புள்ள வாரிசுகளுக்கு அந்த வரி செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இதனை இந்திய அரசு வசூலிப்பது இல்லை. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீத வரி என்பதை 35 சதவீதமாக குறைத்துவிட்டனர். இதனை 40 சதவீதமாக மீண்டும் உயர்த்த வேண்டும். மேலும் பங்கு வர்த்தகத்தில் லாபமாக ஆயிரம் கோடிக்கு மேல் வைத்துள்ளவர்களுக்கு லாபத்தின் மீது வரி விதித்து வசூலிக்க வேண்டும். தமிழகம் உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிக்க வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி