உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூலி உயர்த்தி வழங்க ஆட்களை திரட்டும் ஏஜன்டுகள் வலியுறுத்தல்

கூலி உயர்த்தி வழங்க ஆட்களை திரட்டும் ஏஜன்டுகள் வலியுறுத்தல்

கம்பம் : பிரசார கூட்டங்களுக்கு அழைத்து வரும் மக்கள் குறைந்தது 2 மணி நேரம் இருப்பார்கள். அதற்கு மேல் தாமதம் ஆனால் கூலியை உயர்த்தி தர வேண்டும் என கூட்டத்தை அழைத்து வரும் ஏஜன்டுகள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும் போதும், கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கும் மக்கள் அழைத்து வரப்படுகின்றனர். மக்களை அழைத்து வர ஏஜன்ட்டுகள் பலர் உள்ளனர். முன்பு நெல் அறுவடைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்பவர்களை கிராமங்களில் புள்ளிக் காரர் என்று அழைப்பது வழக்கம், அதே பாணியில் தற்போது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர ஆட்கள் உள்ளனர்.நபர் ஒன்றுக்கு ரூ.200 ஆண் அல்லது பெண் 100 பேர்கள் என்றால் ரூ.20 ஆயிரம் பிளஸ் ஏஜன்ட் கட்டணம் என ரூ.1000 பெற்றுக் கொள்வார்கள். கடந்த இரு வாரங்களாக இந் நிலை இருந்தது.தற்போது ஆட்களை அழைத்து வரும் ஏஜண்டுகள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்துகின்றனர். ரூ.200 என்பதை 300 ஆகவும், 2 மணி நேரம் மட்டுமே என்றும், கூடுதல் நேரம் என்றால் அதற்கு தனி கட்டணம் என்றும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை