உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

தேனி: தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு,- புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநில துணை தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் நாராயணன், தேனி வழக்கறிஞர் சங்க செயலாளர் செல்வக்குமார், துணைத் தலைவர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் அரசன், கமல்ராஜ், வித்யா உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் நேற்று காலை மதுரையில் இருந்து போடி சென்ற அதிவிரைவு பயணிகள் ரயிலை மறித்து கோஷமிட்டனர். 12 நிமிடங்கள் ரயிலை மறித்து கோஷமிட்டு கலைந்து சென்றனர். தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரயில்வே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி