உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குளத்து பாதையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

குளத்து பாதையை தார் சாலையாக மாற்ற கோரிக்கை

கம்பம்: கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல பயன்படும் வீரப்ப நாயக்கன் குளத்து சாலையை, தார் சாலையாக மாற்றி பராமரிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பத்திலிருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல காமயகவுண்டன்பட்டி அல்லது சுருளிப்பட்டி வழியாக தான் செல்ல வேண்டும். இரண்டு பாதைகளிலும் 6 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யவேண்டும். ஆனால் வீரப்ப நாயக்கன் குளத்து பாதையில் வந்தால் 2 கி.மீ. தூரத்தில் நாராயணத்தேவன்பட்டியை அடைந்து விடலாம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர்களும், விவசாயிகளும் இந்த பாதையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். விவசாயிகளும் அதிக அளவு பயன்படுத்தும் இந்த சாலை , மண் சாலையாக இருப்பதால், இந்த பாதையில், மழை பெய்தால், பயன்படுத்த வே முடியாது. எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த குளத்து பாதையை தார் சாலையாக மாற்றி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை