உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூத் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் அதிகாலை 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு

பூத் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் அதிகாலை 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு

தேனி: தமிழகத்தில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. இன்று காலை 5:30 மணிக்கு பூத் ஏஜென்ட்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.இதில் 50 ஓட்டுகள் பதிவு செய்து ஏஜென்டுகளுக்கு காண்பித்து இயந்திரம் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து பின்னர் இயந்திரத்தில் உள்ள பதிவுகளை அழித்து 'ஜீரோ' நிலையில் வைக்க வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவின் போது குறைந்த பட்சம் 2 ஏஜென்ட்டுகளாகளாவது இருக்க வேண்டும். ஏஜென்ட்டுகள் வராத பட்சத்தில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து 5:45 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். அதன்பின் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்க வேண்டும்.ஓட்டுப்பதிவு பற்றிய விபரங்களை ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மண்டல அலுவலர்களுக்கும், மண்டல அலுவலர் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது. அதற்கு மேல் ஓட்டளிக்க வாக்காளர்கள் வரிசையில் நின்றால் கடைசியில் நிற்கும் வாக்காளரிடம் டோக்கன் வழங்கப்படும்.டோக்கன் பெற்ற நபர் கடைசியாக ஓட்டளிப்பார். மண்டல அலுவலர்கள் மூலம் ஓட்டுப்பதிவு கருவிகள் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை