உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு

தேனி, : தேனி கலெக்டர் அலுவலகம் வந்த டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள்கள் தாலுகா அலுவலகங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாவட்டத்தில் 154 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூன் 9 ல் நடக்கிறது. இத் தேர்வினை மாவட்டத்தில் 40,869 பேர் எழுதுகின்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள்கள் வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட கருவூலத்தில் அனைத்து வினாத்தாள்களையும் வைப்பதற்கான போதிய இடம் இல்லாததால் தாலுகா அலுவலகங்களில் உள்ள ஸ்டாரங்ரூம்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மினி வேன்கள் மூலம் வினாத்தாள்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்வு நாள் காலையில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ