கருத்தரங்கம்
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் என்.சி.சி., சார்பில் மாணவர்களின் ஆரோக்கியத்தில் துரித உணவின் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன் விழாவிற்கு தலைமை வகித்தார். உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் பேசுகையில், 'துரித உணவுகளின் நச்சு தன்மை, அதன் தாக்கம், மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி விளக்கினார்.கருத்தரங்கை என்.சி.சி., அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தார்.