உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடை முன் நிழற்பந்தல் தேவை

ரேஷன் கடை முன் நிழற்பந்தல் தேவை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் சித்தார்பட்டி ரேஷன் கடையில் சித்தார்பட்டி, எஸ்.கதிர்நரசிங்கபுரம் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடை முன்பு சிமென்ட் தளத்தில் வெயிலில் வரிசையில் காத்திருந்து ரேஷன் கார்டு பதிவுக்குப் பின் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடைக்கு வருவோர் வெயில், மழைக்கு பாதிப்படைகின்றனர்.ரேஷன்கடை முன்பு நிழற்பந்தல் அமைக்க சிவில் சப்ளை, கூட்டுறவுத்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை