உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சனி மஹாபிரதோஷ வழிபாடு

சனி மஹாபிரதோஷ வழிபாடு

--பெரியகுளம், : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆவணி மாதம் மஹா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டுகைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் தென்கரை இந்திராபுரி தெருவில் சிவனேஸ்வரர், தையல்நாயகி அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி அம்மன் கோயிலில் அதிகார நாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும் அருகம்புல் அணிந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ