உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாயை வெட்டிய மகன் கைது

தாயை வெட்டிய மகன் கைது

தேவதானப்பட்டி : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு 30. இவரது தாயார் அழகரம்மாளுடன் சேர்ந்து பெரியகுளம்- வத்தலக்குண்டு மெயின் ரோடு மீனாட்சிபுரம் பிரிவு அருகே கறிச்சோறு ஓட்டல் நடத்தி வந்தனர். பிரபுவின் தம்பி விஜய் 27. சொத்தை பிரித்து தருமாறு அண்ணனிடம், தாயாரிடமும் வாக்குவாதம் செய்தார். இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஜய் அரிவாள்மனையால் அழகரம்மாளை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழகரம்மாள் கொண்டு செல்லப்பட்டார்.தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன், விஜயை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ