| ADDED : ஏப் 27, 2024 05:10 AM
தேனி: மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஏப்., 29 முதல் மே 13 வரை கோடை கால பயிற்சி முகாம் நடக்க உள்ளது.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: இம்முகாம் 15 நாட்கள் நடக்கிறது. இதில் கபடி, கால்பந்து, வாலிபால் , கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை ஏப்., 29 முதல் மே 13 வரை தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், மாணவர் அல்லாதவர்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்போருக்கு காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 4:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி நடத்தப்படும். பயிற்சி கட்டணம் ரூ.200 பாயிண்ட் ஆப் சேல் மிஷன் மூலம் மட்டுமே பெறப்படும். ரொக்கமாக பணம் பெற இயலாது. பங்கேற்போர் மாவட்ட விளையாட்டு அலுவலரின் 74017 03505 என்ற அலைபேசி எண்ணிலும், 04546 - 253090 என்ற அலுவலக எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஏப்., 27 மாலை 6:00 மணி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை, ஆதார் கார்டுடன் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி வழங்கப்படும் விளையாட்டுக்களின் விபரங்கள் www.sdat.tn.gov.inஎனும் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்