உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளி வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டு

தொழிலாளி வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டு

பெரியகுளம்: வடுகபட்டியில் வெள்ளைப் பூண்டு தரம் பிரிக்கும் பெண் தொழிலாளி ராமலட்சுமியின் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.பெரியகுளம் அருகே வடுகபட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் 36. கரூரில் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி 33. இவர்களுக்கு ஹேமந்த், தர்ஷினி இரு பிள்ளைகள் உள்ளனர். ராமலட்சுமி அந்தப் பகுதியில் வெள்ளைப் பூண்டு கோடவுனில் பூண்டு தரம் பிரித்தெடுக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நெக்லஸ், 3 பவுன் தங்க கவர்னர் மாலை என ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போயிருந்தது. தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா விசாரணை செய்து வருகிறார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை