உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க சிவிஜில் செயலியை பயன்படுத்துங்க

தேர்தல் முறைகேடுகளை தெரிவிக்க சிவிஜில் செயலியை பயன்படுத்துங்க

தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் ஓட்டிற்காக பணம், பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தொகுதி தோறும் கட்டணமில்லா அலைபேசி எண்கள், தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பு எண்கள் வழங்கப்படுள்ளன. இதைத் தாண்டி வாக்களார்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முறைகேடு சம்பவங்களை புகைப்படம், வீடியோ, ஆடியோ உடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்க அலைபேசியில் தேர்தல் ஆணையத்தில் சிவிஜில்(cVIGIL) செயலியை பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மாவட்டத்தில் இந்த செயலி மூலம் இதுவரை 9 புகார்கள் வந்துள்ளன.அதிகாரிகள் கூறுகையில், சிவிஜில் செயலில் தங்கள் பகுதியில் யாரேனும் பணம், பரிசு பொருட்கள் வழங்கினால் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றலாம். புகார் தெரிவித்த 50 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். செயலியில் பதிவேற்றப்படும் புகார்கள் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அங்குள்ள அலுவலர்கள், புகார் வந்த இடத்திற்கு அருகே உள்ள பறக்கும்படை, நிலைக்குழுவிற்கு தகவல் தெரிவிப்பர். இக்குழு புகார் உறுதி செய்யப்பட்டால் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கும் போது பதிவேற்றப்படும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை உடனடியாக எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே செயலியில் பதிவேற்ற இயலும். இதனால் பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவேற்ற இயலாது. இச்செயலியில் தவறான தகவல் தெரிவித்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை