| ADDED : மே 10, 2024 05:23 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய 12 கருவிகள் வந்துள்ளன. பணிகள் ஜூனில் துவங்குகிறது.மாவட்டத்தில் 530 அரசு பள்ளிகள், 216 உதவி பெறும் பள்ளிகளில் உள்ளன. பள்ளி மாணவர்களில் பலரது ஆதார் எடுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.தொடக்கப்பள்ளிகளில் பயிலும் சில மாணவர்களுக்கு ஆதார் இல்லாமல் உள்ளது. தற்போது வங்கி கணக்கு துவங்குதல், அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் முக்கிய தேவையாக உள்ளது.இதனால் பள்ளிக்கல்வித்துறை, எல்கார்டு நிறுவனம் இணைந்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளன. இல்லாத மாணவர்களுக்கு புதிதாக பதிவு செய்யப்படவும் உள்ளது. இப்பணிகள் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இப்பணிகளுக்காக மாவட்டத்திற்கு 12 கருவிகள் வரப்பட்டுள்ளது. இவை தாலுகா வாரியாக தேனி, உத்தமபாளையம் தலா 3 கருவிகள் , பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி தலா 2கருவிகள் அனுப்பட உள்ளன. கருவிகளை இயக்க அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.