உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 2367 மண் மாதிரிகள் பரிசோதனை நைட்ரஜன், அங்கக கரிம சத்துக்கள் பற்றாக்குறை

2367 மண் மாதிரிகள் பரிசோதனை நைட்ரஜன், அங்கக கரிம சத்துக்கள் பற்றாக்குறை

தேனி: மாவட்டத்தில் ஆறுமாதங்களில் 2367 மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பரிசோதனையில் விளை நிலங்களில் நைட்ரஜன், அங்கக கரிம சத்து பற்றாக்குறை கண்டறியப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் 2889.23 ச.கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நெல், வாழை, காய்கறிகள், பூக்கள்,சிறுதானியங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. வேளாண் துறையினர் மண் பரிசோதனை செய்து தேவையான அளவு உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். மண் பரிசோதனை நிலையம் தேனி சுக்குவாடன்பட்டி தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு கடந்த ஆறுமாதத்தில் 2367 மண்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 352 நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இப் பரிசோதனைகள் முடிவில் 8 வட்டாரங்களிலும் விளை நிலங்களில் நைட்ரஜன் சத்து, அங்கக கரிமம் பற்றாக்குறையாக உள்ளது. கண்டறியப்பட்டுள்ளது.வேளாண்துறையினர் கூறுகையில், விவசாய நிலங்களில் ஒரு ஏக்கருக்கு நைட்ரஜன் சத்து 113கிலோ இருக்க வேண்டும். ஆனால் அனைத்து பகுதிகளிலும் குறைவாக உள்ளது. இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். நைட்ரஜன் சத்தினை அதிகரிக்க உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், அசோலா பயன்படுத்தலாம். பயறுவகைகள் பயிரிட வேண்டும். வேளாண் அலுவலர்களை ஆலோசித்து யூரியா பயன்படுத்த வேண்டும். யூரியா அதிகம் பயன்படுத்தினால் பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும். அங்கக கரிமம் ஏக்கருக்கு 0.5 சதவீதம் இருக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகபட்சமாக 0.2சதவீதம் மட்டும் உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும். அங்கக கரிமம் அதிகரிக்க பசுந்தாள் உரம், மண்புழு உரம், இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் ரூ. 30 செலுத்தி மண், நீரினை பரிசோதனை செய்து கொள்ளலாம். மண் பரிசோதனை முடிவுகள் 3 நாட்களில் தெரிவிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ