உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர்கள் திருடிய 5 பேர் கைது: 13 டூவீலர்கள் மீட்பு

டூவீலர்கள் திருடிய 5 பேர் கைது: 13 டூவீலர்கள் மீட்பு

கம்பம் : தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் டூவீலர்களை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து 13 டூவீலர்கள் மீட்டனர்.மாவட்டத்தில் பரவலாக டூவீலர்கள் திருட்டு நடந்தது. எஸ்.பி. சிவபிரசரத் உத்தரவில் கம்பம் ஸ்பெஷல் குற்றப்பிரிவு குழு சிறப்பு எஸ்.ஐ. முனியாண்டி தலைமையில்விசாரணை மேற்கொண்டனர். டூவீலர் மெக்கானிக்குகள், டீலர்களில் விசாரித்ததில் உத்தம பாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த சேகர் 42 அவரது மகன் விக்னேஷ் 20 ஆகிய இருவரையும் பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் போல் கூடலூரை சேர்ந்த ஆனந்தகுமார் 51, கருநாக்கமுத்தன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் 43, சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் 40 ஆகிய 5 பேர்களை கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் - பேரில் பல்வேறு நபர்களிடமிருந்து 13 டூவீலர்கள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியதாகவும், கேரளாவில் விற்பனை செய்ததாகவும் கூறினார்கள். போலீசார் சென்று விசாரித்த போது, இவர்கள் கூறிய விலாசத்தில் டூவீலர்கள் இல்லை. மீட்கப்பட்ட டூவீலர்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி