உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி உழவர் சந்தையில் ரூ.5.42 கோ டிக்கு விற்பனை

தேனி உழவர் சந்தையில் ரூ.5.42 கோ டிக்கு விற்பனை

தேனி : தேனி உழவர் சந்தையில் ஜூலையில் ரூ.5.42 கோடி மதிப்பிலான 105.39 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.தேனி உழவர் சந்தை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை செயல்படுகிறது. பொதுமக்கள் உழவர் சந்தையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இங்கு கடந்த மாதம் ரூ. 5.42 கோடி மதிப்பிலான 105.39 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளது. மேலும் சந்தையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரூ.10க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பொருத்துப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை