உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் 837 டன் நெல் கொள்முதல் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

பெரியகுளத்தில் 837 டன் நெல் கொள்முதல் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தகவல்

தேனி: பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம், கீழவடகரையில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்தில் 837 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நெல் அறுவடையை முன்னிட்டு பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மங்கலத்தில் 2, கீழவடகரையில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.ஒவ்வொரு கொள் முதல் நிலையத்திலும் தினமும் 32 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 3 கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து 837 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சன்னரகத்திற்கு குவிண்டால் ரூ.2203, ஊக்கத்தொகை ரூ.107 சேர்த்து ரூ.2310 வழங்கப்படுகிறது. அதே போல் பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2183, ஊக்கத்தொகை ரூ.82 சேர்த்து ரூ.2265 வழங்கப்படுகிறது.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, அவர்களின் வங்கி கணக்கிற்கு இரு நாட்களில் பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை 140 விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் ஏதேனும் தவறுகள் நடந்தால் புகார் தெரிவிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. தாமரைகுளத்தில் புதிய கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை