உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

மூணாறு: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் இருவர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மூணாறு அருகே மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாபுதேவசியா. இவருக்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த ரம்யா, பாலக்காட்டைச் சேர்ந்த ஜோசி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் சாபுதேவசியாவின் மகனுக்கு நியூசிலாந்த் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரம்யா, ஜோசி ஆகியோர் ரூ.8 லட்சம் கேட்டனர். அதன்படி முன் பணமாக கடந்தாண்டு மே மாதம் ரம்யாவின் வங்கி கணக்கு மூலம் ரூ.4 லட்சம் வழங்கினார்.அதன்பிறகு கடந்த ஓராண்டாக இருவரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக சாபுதேவகியா உணர்ந்தார். அவர் போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் ரம்யா, ஜோசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை