உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆறு வாக்காளர்களுக்கு இயங்கும் ஓட்டுச்சாவடி

ஆறு வாக்காளர்களுக்கு இயங்கும் ஓட்டுச்சாவடி

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் ஆறு வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடி ஆண்டிபட்டி தொகுதி வெள்ளிமலையில் அமைக்கப்பட்டுள்ளது.தேனி தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட 44 ஓட்டுச்சாவடிகள் 44 உள்ளன. இதில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு அதிகபட்சமா 1400 முதல் 1500 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடியாக ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி, வெள்ளிமலையில் ஆறு வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடியாக துரைச்சாமி மரகதம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் செயல்படுகிறது. ஆறு வாக்காளர்கள் ஓட்டளிக்க தேர்தல் பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஐந்து பேரும், போலீசார் பணியாற்ற உள்ளனர்.இதே போல் 300 வாக்காளர்களுக்கும் குறைவான ஓட்டுச்சாவடிகள் 17 உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் 5, போடி தொகுதியில் 8 அமைந்துள்ளன. குறைந்த வாக்காளர்கள் உள்ள கர்டானா எஸ்டேட்டில் 53 பேர், கொழுக்குமலையில் 43, சென்ட்ரல் ஸ்டேஷன் 96, முதுவார்குடியில் 62 பேர் என 100 வாக்காளர்களுக்கும் குறைவானவர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடிகள் மலைபகுதியில் அமைந்துள்ளன. இந்த ஓட்டுச்சாவடிக்கு தேவையான இயந்திரங்கள், பொருட்கள் எடுத்து செல்லும் பணி இன்று காலையில் துவங்குகிறது. இதில் போடி தொகுதிக்குட்பட்ட ஊரடி ஊத்துக்காடு, சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகிய ஓட்டுச்சாவடிகளுக்கு ரோடு வசதி இல்லாததால் குதிரைகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை