உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒருசில ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க ஆலோசனை

ஒருசில ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க ஆலோசனை

தேனி: மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளை இரு ஊராட்சியாக பிரிக்க ஊராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில் 130 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள் உள்ளன. இதில் தலைநகரில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியுடன் அருகில் உள்ள ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி, அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதே போல் ஆண்டிபட்டி ஒன்றியம் திருமலாபுரம், கண்டமனுார், கடமலைக்குண்டு ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதிகாரிகள் கூறுகையில், ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், நகராட்சிகளுடன் இணைக்கவும் பணிகள் நடந்து வருகிறது. சில ஊராட்சிகளில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளதால் பேரூராட்சியாக மாற்ற உள்ள ஊராட்சிகளை இரு ஊராட்சிகளாக பிரிப்பதற்கு ஆலோசனை நடந்து வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி