பயன் இல்லாத அடி குழாய்
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 14வது வார்டில் சிவராம் நகர் மிரண்டாலைன் 6வது குறுக்குத்தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அடிகுழாய், தற்போது பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் இந்த தெருவில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். சிலர் இந்த குழாயினால் தடுமாறி விழுகின்றனர். வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்முன் பயன்பாட்டில் இல்லாத அடிகுழாயை அகற்ற நகராடசி நடவடிக்கை எடுக்க அப்பகுதிமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.