| ADDED : ஜூலை 27, 2024 05:22 AM
தேனி, : வடபுதுப்பட்டியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 'டேலன்ட்டியா -- 24' என்ற தலைப்பிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி துவங்கியது. உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் மாணவர்களின் தனித்திறன் அறைகளை திறந்து வைத்தனர். 280 மாணவ, மாணவிகள் 160க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் சாதாரண வாட்டர் கேன் மூடிகளால் உருவாக்கப்பட்ட நீர் மின்சாரம் தயாரிக்கும் டர்பன் இன்ஜின் மாதிரி, வீடுகளில் சூரிய மின்சாரம் அதிகளவில் சேமிககும் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடு, ரயில் விபத்துக்களை தவிர்க்கும் ‛அல்ட்ரா ரெட் சென்சார்' பேஷன்ஷோ, உடை அலங்கார அணிவகுப்பு, ஓவியங்கள், கலைப்பொருட்கள் என படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் தர்மராஜன், பள்ளி செயலாளர் லட்சுமணன், இணைச் செயலாளர்கள் அருஞ்சுனைகனி, பாலசுந்தரம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர் வசந்தா, துணை முதல்வர் கவிதா ஆகியோர் மாணவர்களை பாாட்டினர். இன்றும் கண்காட்சி நடக்க உள்ளது.