மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
11 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
11 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
14 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
14 hour(s) ago
பெரியகுளம்: பஜார் வீதியில் இடையூறு ஏற்படுத்திய 'மெகா' இரும்பு பெட்டிகடை அகற்றி வராகநதி பாலத்தில் வைத்துள்ளது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் வராகநதி குறுகே இருந்த ஆடுபாலம் தற்போது தரை பாலமாக மாற்றி டூவீலர் முதல் கனரக வாகனங்கள் சென்று வருகிறது. தென்கரையில் இருந்து வடகரைக்கும், வடகரையில் இருந்து தென்கரைக்கும் பாலத்தின் வழியாக எளிதாக செல்லலாம். பாலத்தின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பாக தற்காலிக கடைகள் பெருகி வருகிறது.மேலும் சில மாதங்களுக்கு முன்பு பஜார் வீதியில் மகளிர் திட்ட கடை வரவேற்பு இல்லாததால் பூட்டப்பட்டது. பெரிய அளவிலான இரும்பு பெட்டி கடையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை வேறு பகுதிக்கு மாற்ற அனைத்து சங்கங்களும் வலியுறுத்தின. அந்த பெட்டி கடையை நகராட்சி அலுவலக காலி இடத்தில் வைப்பதற்காக தூக்கி செல்லப்பட்டது. ஆனால் அங்கு சொல்லாமல் வராகநதி பாலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் வைக்கப்பட்டது. தற்போது இந்த பெட்டி கடை உபயோகமில்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் அந்தப் பெட்டியை நகராட்சி வளாகத்திற்குள் கொண்டு செல்வதற்கும், பாலத்தின் இரு புற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடாவடி வசூல்மேலும் பாலத்தின் இருபுறமும் தற்காலிக கடை நடத்துவோரிடம் நகராட்சி அனுமதியின்றி தினமும் ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கின்றனர். இதற்கு ரசீது ஏதும் இல்லை. போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒருவர் தினமும் வந்து வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வது தொடர்கிறது. இதனையும் தடுத்துநிறுத்த வேண்டும்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago