உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது

தேனி : மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குலுக்கல் முறையில் இன்று நடக்கிறது.தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாய கல்விஉரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த குழந்தைகள் கல்வி வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏப்., 22 முதல் மே 20க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதிகாரிகள் கூறுகையில், இச்சட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 115 பள்ளிகளில் 1264 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. இதுவரை 4884 விண்ணப்பங்கள் ஆன் லைனில் விண்ணப்பித்துள்ளனர்.அதில் இரட்டை பதிவு, உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்ய பட்ட விண்ணபதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இன்று (மே 28) மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் அதிகளவு வந்துள்ள பள்ளியில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதை வீடியோ பதிவு செய்யவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ