| ADDED : மே 24, 2024 03:23 AM
தேனி: கடமலைக்குண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை வாங்கிச் சென்றனர்.கடமலைக்குண்டு செங்குளம் மெயின்ரோடு நாகராஜ் 47. இவரது மகன் சூரியா 22. ஊரில் வைகாசித் திருவிழா நடப்பதால் வீருசின்னன் வீட்டிற்கு கோம்பையை சேர்ந்த உறவினர்கள் வந்தனர். வீருசின்னன் உறவினர்களுக்கும் சூர்யாவிற்கும் மே 21ல் இரவு தகராறு ஏற்பட்டது. சூர்யாவின் தந்தை நாகராஜ் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், மே 22 நள்ளிரவில் சீப்பாலக்கோட்டை அன்பழகன் மகன் அஸ்வின், மற்றொரு வாலிபருடன் டூவீலரில் ஏறி எனது மகன் சென்றார். மறுநாள் காலை மேல்சட்டை இன்றி உடலில் காயத்துடன் வீடு திரும்பி படுத்திருந்த மகன் சூர்யா மயங்கி கிடந்தார். உடனடியாக கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றோம். அங்கு மகனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் எனது மகன் இறப்பு மீது சந்தேகம் உள்ளது நடவடிக்கை எடுக்க கோரினார். கடமலைக்குண்டு எஸ்.ஐ., ராஜசேகர் சந்தேகமரணமாக வழக்குப்பதிந்தார். இந்நிலையில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்களை கைது பின் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்று உடலை வாங்கிச் சென்றனர்.