உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க ஆலோசனை

ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க ஆலோசனை

கூடலுார்: கூடலுாரில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க நகர் நலக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த இக்கோயில் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோயிலை சீரமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நகர் நலக் குழு சார்பில் நடந்தது. தலைவர் அருண்குமார், துணைத் தலைவர் ராமர். செயலாளர் ஷாஜகான், பொருளாளர் மோகன்தாஸ் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர். கோயில் முழுமையாக சேதம் அடைவதற்குள் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை