உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க அறிவுரை தெருக்களில் வீசுவதை தவிர்க்க வலியுறுத்தல்

வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க அறிவுரை தெருக்களில் வீசுவதை தவிர்க்க வலியுறுத்தல்

தேனி: பொதுமக்கள் வீடுகளில் குப்பையை பிரித்து வழங்க வேண்டும். மேலும் தெருக்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என தேனி நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் 33 டன் குப்பை சேகாரமாகிறது. இதனை வீரபாண்டி அருகே உள்ள கிடங்கில் கொட்டி வந்தனர். இதில் மக்கும் குப்பையை பிரித்து நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் உரமாக மாற்றி வந்தனர். இந்நிலையில் வீரபாண்டி குப்பை கிடங்கில் குப்பையை நேரடியாக கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மக்கும் குப்பையை உரமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறையால் நகர்பகுதியில் குப்பை அகற்றவதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டவில்லை என குற்றம் சாட்டி வந்தனர். பணியாளர்கள் பற்றாகுறையால் நகரில் பல இடங்களில் ஆங்காங்கே குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட 5 டிவிஷன்களில் நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் 60 பேர், அவுட்சோர்சிங் முறையில் 120க்கும் மேற்பட்டோர் துாய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களிடம் ஒவ்வொரு தெருவிலும் வீடுகளில் குப்பையை வாங்கிய பின் அதனை மக்கும், மக்காத குப்பை என பிரித்து டிராக்டரில் ஏற்ற கூறி உள்ளோம். ஒவ்வொரு தெருவிலும் இப்பணியை முடித்து அடுத்த தெருவிற்கு செல்லவதால், வீடுகளில் குப்பை வாங்க தாமதமாகிறது. மேலும் பொதுமக்கள் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். தெருக்களில் குப்பையை வீசுவதை தவிர்க்க வேண்டும். குப்பையை தரம் பிரித்து வழங்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிலர் சாம்பார்,குழம்புடன் பொட்டலங்களை அப்படியே குப்பையில் வீசுகின்றனர். இதனை பிரிக்கும் பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பொதுமக்கள் குப்பையை பிரித்து வழங்க முன்வர வேண்டும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி