உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மயில்கள், காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த வேளாண் பயிர்கள்

மயில்கள், காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த வேளாண் பயிர்கள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் மறவபட்டி அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களில் மயில்கள், காட்டுப் பன்றிகளால் சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இப்பகுதி விவசாய நிலங்களில் நிலக்கடலை, மக்காச்சோளம், சிறுதானியங்கள், காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள இப்பகுதி ஆண்டிபட்டி வனச்சரகத்திற்கு உட்பட்டுள்ளது. மலை சார்ந்துள்ள பகுதியில் காட்டுப் பன்றிகள், மயில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. விளை நிலங்களில் கூட்டமாக வரும் மயில்கள் சிறு தானியங்கள், காய்கறி பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுப் பன்றிகள் நிலக்கடலை, மக்காச்சோளம் பயிர்களை தோண்டி சேதப்படுத்துகிறது. பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், மயில்களை விவசாயிகள் கட்டுப்படுத்த முடியவில்லை. மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்து விளை நிலங்களில் பயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வனத்துறை முன்வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !