உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் நடத்திய வேளாண் கண்காட்சி

மாணவிகள் நடத்திய வேளாண் கண்காட்சி

உத்தமபாளையம், : மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் சுஜாதா, செளமியா, சுவாதி, ஸ்வேதா, சோனாபி நோஜ் , ஸ்ரீதேவி, இந்து, ப்ரியா நாகபிரகன்யா ஆகியோர் கிராமப்புற மேலாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் பகுதியில் தங்கி விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பங்களை விளக்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோம்பையில் வேளாண் கண்காட்சி நடத்தினார்கள். கண்காட்சி யில் மண் புழு உர படுக்கை அமைப்பது, பாதுகாக்கப்பட்ட சாகுபடி, ஒருங்கிணைந்த விவசாய சாகுபடி, சொட்டுநீர் பாசனம், திராட்சை சாகுபடியில் ஒய் வடிவ கம்பிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை காட்சிப்படுத்தி விளக்கியிருந்தனர். விவசாயிகள் கண்காட்சியை பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை