உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

போடி: போடி அருகே சிலமலை, ராசிங்கபுரம், சில்லமரத்துப்பட்டி பகுதியில் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மருந்துகளும், ரசாயன உரங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணா வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், பாரம்பரிய முறைகள் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் சிலமலையில் நடந்தது. உதவி அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். கருத்தரங்கில் இயற்கை உரங்கள் தயாரிப்பது, மண்புழு உரத்தால் நிலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகள் அவன்சியா, பிரியதர்ஷினி, நந்தினி, சவுமியா, நிஷாந்தினி, ஸ்ரீ நித்தியா, ஆர்த்தி, கலையரசி, கவிப்பிரியா ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி