உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவங்கியது

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவங்கியது

பெரியகுளம்: பெரியகுளத்தில் நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜுபிலி அணி முதல் வெற்றி பெற்றது.பெரியகுளம் பி.டி.சிதம்பர சூரிய நாராயணன் நினைவு 63-ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து பந்து போட்டிநேற்று துரை ராம சிதம்பரம் நினைவு மின்னொளி போட்டியாக துவங்கியது. போட்டிகள் நேற்று மே 15 முதல் 21 வரை நடக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த கூடைப்பந்து அணிகள் மோதுகின்றன.விளையாட்டு கழக கொடியினை நகராட்சி தலைவர் சுமிதா ஏற்றினார். போட்டிகளை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை பொது மேலாளர் மோகன்குமார் துவக்கி வைத்தார். மின்னொளியை மின்வாரியம் செயற்பொறியாளர் பாலபூமி இயக்கி வைத்தார். முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், வத்தலக்குண்டு ராயல் அணியும் மோதின. இரு அணி வீரர்களும் முதல் வெற்றியை பதிவு செய்ய விளையாடினர். இதில் பெரியகுளம் அணி 80:78 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை