உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி கலெக்டரை மாற்ற அனுமதி

இடுக்கி கலெக்டரை மாற்ற அனுமதி

மூணாறு : இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜை பணியிடமாற்றம் செய்ய அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இடுக்கி மாவட்டத்தில் ஆளும் கட்சியினர், கலெக்டர் ஷீபாஜார்ஜ் ஆகியோருக்கு இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கலெக்டரை பணியிடமாற்றம் செய்ய லோக்சபா தேர்தலுக்கு முன் அரசு முடிவு செய்தது. ஆனால் லோக்சபா தேர்தல், மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சுட்டிக்காட்டி கலெக்டரை மாற்றுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை செயலாளர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அதன்படி கலெக்டரை மாற்றுவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், மனு ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.அதேசமயம் மூணாறு உள்பட பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றல், நிலப் பட்டாக்கள் தன்மையின் பரிசோதனை, நிலம் வழங்குதல் ஆகியவற்றை கையாள சிறப்பு அதிகாரியை நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.கலெக்டருக்கு நிகரான பொறுப்பு அல்லது உயர் அதிகாரி ஆகியோரை சிறப்பு அதிகாரி நியமிக்க நீதிபதிகள் அறிவுறித்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ