உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் விபரங்களை தேடும் அ.ம.மு.க., பொறுப்பாளர்கள்

வாக்காளர் விபரங்களை தேடும் அ.ம.மு.க., பொறுப்பாளர்கள்

ஆண்டிபட்டி : தேனி லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதியின் பல இடங்களிலும் தங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.தேனி தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் ஒப்பிடுகையில் அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அ.ம.மு.க., தலைமை மூலம் வெளியூர் நபர்கள் தங்கி தேர்தல் பணிகளை தொடர்கின்றனர். வெளியூர் நபர்களுக்கு ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. இதனால் கட்சியின் கிளைகள், பூத் வாரியாக உள்ள பொறுப்பாளர்கள் துணையுடன் தங்களுக்கான ஓட்டுக்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். தொகுதியின் அனைத்து இடங்களிலும் அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், வேட்பாளர் மற்றும் வி.ஐ.பி.க்கள் பிரசாரத்துடன், கட்சி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று ஓட்டுக்களை கேன்வாஸ் செய்ய வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி