உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

ஆசிரியரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது

தேனி : தேனி முத்துத்தேவன்பட்டி ராமகிருஷ்ணன். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். பழைய தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அதனை விலை குறைவாக வாங்கி தருவதாக இவரிடம் சுக்குவாடன்பட்டி ஆண்டவர் கூறினார். இதனை நம்பி பிப்.19 இரவில் காரில் சென்ற போது ஆசிரியர் காரை வழிமறித்த 7பேர் கொண்ட கும்பல், ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியது. வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.இதில் ஈடுபட்ட ஆண்டவர், சுரேந்திரன், விஜயகுமார் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இதில் தொடர்புடைய அரண்மனைப்புதுார் நாகராஜை 33, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 2.50 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில் மற்றவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ