உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்ணகி கோயிலில் பவுர்ணமிக்கு அனுமதி அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

கண்ணகி கோயிலில் பவுர்ணமிக்கு அனுமதி அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

கம்பம்:கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.கம்பம் கம்ப ராயப்ெபருமாள் கோயிலை நேற்று பார்வையிட்ட ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:ஹிந்து கோயில்களின் வருமானத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை எடுத்துக் கொள்கிறது. திருப்பணி,கும்பாபிஷேகம் அனைத்தும் உபயதாரர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கோயில் வருவாயை பயன்படுத்தி திருப்பணி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.அனைத்து கோயில்களின் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடமிருந்து எடுத்து, அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஹிந்துக்கள் சமூக வலை தளங்களில் எந்த பதிவை போட்டாலும், உடனே திராவிட மாடல் அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. லோக்சபாவில் முதன் முதலாக எதிர்கட்சி தலைவராக உள்ள ராகுல் சிறு பிள்ளைத்தனமாக பேசியுள்ளார்.கண்ணகி கோயிலுக்கு ஆண்டிற்கு ஒரு பவுர்ணமி நாளில் அனுமதிக்கின்றனர்.இதை மாற்றி மாதந்தோறும் பவுர்ணமி நாளில் கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர தமிழக அரசு அனுமதி பெற்றுத் தர வேண்டும். பாதையை சீரமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கியிருப்பதாக கூறினார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி